படப்பிடிப்பில் காயமடைந்த ‘தல’ அஜித்…வைரலாகும் சிகிச்சை வீடியோ…!!

இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘விவேகம்’.எதிர்மறையான விமர்சனத்தை இப்படம் சந்தித்தாலும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றது.

விவேகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்கெரியா மற்றும் செர்பியாவில் நடைபெற்றபோது ‘தல’ அஜித்திற்கு தோள்பட்டையில் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதி படுத்தும் வகையில் சமீபத்தில் அஜித்திற்கு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின் கையில் கட்டுடன் சகஜமாக நடந்து செல்லும் சிசிடிவி விடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்