தமிழில் டப்பிங் பேசும் சாய் பல்லவி

தான் நடித்துள்ள ‘கரு’ படத்துக்காக, தமிழில் டப்பிங் பேசுகிறாராம் சாய் பல்லவி.

‘வனமகன்’ படத்துக்குப் பிறகு விஜய் இயக்கியுள்ள படம் ‘கரு’. ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி, இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை, அபார்ஷன் பற்றியது. தெலுங்கிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தில், 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் சாய் பல்லவி.

இந்தப் படத்துக்கு விருது கிடைக்கலாம் என்பதற்காக, சாய் பல்லவியையே தமிழில் டப்பிங் பேசச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர். சாய் பல்லவியும் அதற்கு சம்மதித்துவிட்டார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் விஜய்.

அந்தப் படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்