4 வயது குழந்தையின் உயிரை குடித்த பணிப்பெண்! நடந்தது என்ன?

கனடா நாட்டில் பணிப்பெண் ஒருவரின் அஜாக்கிரதை காரணமாக 4 வயது குழந்தை ஒன்று காருக்குள் அடைக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள ரொறொன்ரோ நகரில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் 4 வயது ஆண் குழந்தை ஒன்றை பராமரிக்க Zeljna Kosovac(50) என்ற பணிப்பெண்ணை பெற்றோர் நியமித்துள்ளது. நேற்று பிற்பகல் வேளையில் குழந்தை காருக்குள் அமர வைத்துவிட்டு பண்ணிபெண் வெளியே சென்றுள்ளார்.
அப்போது, சுமார் 26 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் அடித்ததால் காருக்குள் மேலும் வெப்பம் அதிகரித்துள்ளது. சில நிமிடங்களுக்கு பின்னர் அங்கு துப்புரவு பணிக்கு வந்த பெண் ஒருவர் காருக்குள் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். காருக்குள் சிறுவன் உயிருக்கு போராடுவதை கண்ட சிலர் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு குழந்தையை வெளியே கொண்டு வந்துள்ளனர்.
மயக்கம் தெளியாத நிலையில் குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தையின் மரணத்திற்கு பணிப்பெண்ணின் அஜாக்கிரதையே காரணம் என கருதிய பொலிசார் அவரை உடனடியாக கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிசார் குழந்தையின் மரணம் குறித்து கூடுதல் தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்