ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நிதி செலுத்த மாட்டோம் – அமைச்சர் டேவிஸ்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 40 பில்லியன் பவுண்ட்ஸ் நிதியை பிரித்தானியா செலுத்தாது என, பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இந்த நிதியை செலுத்துவதற்கு பிரித்தானியா தயார் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், எதிர்கால வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்துமாயின், பிரித்தானியாவானது தனது பங்கைச் செலுத்தி கணக்கை தீர்க்கும் என்று அறிக்கையொன்றில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, கடந்த வாரம் இத்தாலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, இரண்டு வருடகாலத்துக்கு பிரித்தானியாவுடன் வர்த்கக உறவை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்