கனடாவில் போலி செய்திகளை கண்டறிவது குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம்!

கனடாவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், போலி செய்திகளை கண்டறிவது குறித்து உலகின் முன்னணி இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது.

போலி செய்திகளை கண்டறிவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக கூகுள் நிறுவனம் 500,000 டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

எவ்வாறு போலி செய்திகளை கண்டறிவது எவ்வாறான செய்திகள் நம்பகமானவை என்பது குறித்து இளம் வயதினருக்கு கூகுள் எடுத்துரைக்கவுள்ளது. இந்த புதிய திட்டம் இளம் வயதினருக்கு மத்தியில் ஊடக அறிவினை மேம்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்