பள்ளிக்கூட ஊழியரை இதற்காகத்தான் மாணவி கத்தியால் குத்தினாரா?

பள்ளிக்கூட ஊழியரை இதற்காகத்தான் மாணவி கத்தியால் குத்தினாரா?

பிரித்தானியாவில் பள்ளிக்கூட ஊழியரை கத்தியால் குத்திய மாணவியை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரித்தானியாவின் North Lincolnshire பகுதியில் உள்ள Winterton Community Academy-ல் காலை 9 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

 

அப்பள்ளியில் படிக்கும் 16 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் 61 வயது ஊழியரை கத்தியால் குத்தியுள்ளார், இதில் படுகாயமடைந்த ஊழியரை மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஊழியருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.

 

சம்பவத்தையடுத்து பள்ளி மாணவியை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பள்ளிக்கூடத்தில் இருந்த மற்ற மாணவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளிக்கூடம் மூடப்படாமல் திறந்து தான் இருக்கும் எனவும் பெற்றோர்களிடம் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்