வளர்த்தவரின் உயிரை பறித்த பாம்பு

பிரித்தானியாவின்  ஹம்சைர் (Hampshire) பகுதியில் வீட்டில் மலைப்பாம்புகளை வளர்த்து வந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

31 வயதுடைய டன் பிரான்டன் (Dan Brandon) என்பவர் பாம்பின் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

எனவே தன்னுடைய வீட்டில் மலைப்பாம்புகளை வளர்த்து வந்தார். அவைகளுடன் விளையாடும் அவர் முகப்புத்தகத்திலும் படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய வீட்டில் படுகாயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு அருகே பாம்பு ஒன்றும் இருந்துள்ளது.

பாம்புக்கு பசி எடுத்த நிலையில் உணவுக்காக வளர்த்தவரையே கொன்றிருக்குமோ என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே தெளிவான முடிவு கிடைக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வளர்த்தவரின் உயிரை பறித்த பாம்பு

வளர்த்தவரின் உயிரை பறித்த பாம்பு

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்