பராஒலிம்பிக் நிகழ்வில் காதலியுடன் இளவரசர் ஹரி

கனடா, ரொறன்டோவில் நடைபெறும் பராஒலிம்பிக் பாணியிலான சர்வதேச விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது காதலி மேகன் மார்க்கெல் ஆகிய இருவரும் இணைந்து முதன்முறையாக பொதுமக்கள் மத்தியில் தோன்றியுள்ளனர்.

பராஒலிம்பிக் பாணியிலான சர்வதேச விளையாட்டு நிகழ்வு, ரொறன்டோவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இளவரசர் ஹரி, தனது காதலியுடன் விளையாட்டு நிகழ்வை கண்டுகளித்து வருகின்றார்.

எதிர்வரும் 30ஆம் திகதிவரை நடைபெறும் இந்நிகழ்வில், 12 வகையான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வருவதுடன், யுத்த நடவடிக்கைகளின்போது அங்கவீனமான 550க்கும் அதிகமான படையினர் இதில் கலந்துகொண்டுள்ளனர். .

யுத்த நடவடிக்கைகளின்போது அங்கவீனமான படையினரைக் கருத்திற்கொண்டு பல்வேறு வகையான விளையாட்டுகளை உள்ளடக்கிய பராஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் இளவரசர் ஹரி ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்