கனடா மன்னிப்பு கோர வேண்டும்: ஐ.நா.

கருப்பினத்தவர் மீதான இனவாதம் மற்றும் அடிமைத்தனம் என்பன தொடர்பில் கனடா மன்னிப்பு கோர வேண்டியதுடன், நஷ்ட ஈடு வழங்குவதும் அவசியமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. ஆலோசனைக் குழு நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கருப்பினத்தவர் மீதான இனவெறி மற்றும் இன முரண்பாடுகள் நிறுவனங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஆழமாக வேரூன்றி நிற்பதாக வரலாறு விவரிப்பதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கருப்பினத்தவர் மீதான அடிமைத்தன வரலாற்றை இல்லாதொழிக்க கனடா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்