ட்ரம்ப் ஒரு இனவாதி: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு இனவாதி என்றும் அவர் ஒரு நாசி ஆதரவாளர் எனவும் பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் உயர்க் கல்வி அமைச்சருமான டேவிட் லெமி விமர்சித்துள்ளார்.

பிரைட்டனில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கட்சியின் வருடாந்த மாநாட்டை தொடர்ந்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ட்ரம்ப், பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டால் நான் வீதியில் இறங்கி போராடுவேன். ட்ரம்ப் இந்நாட்டிற்குள் அனுமதிக்கப்படின், நான் தெருவிற்கு வரவேண்டியிருக்கும் என்றார்.

இதேவேளை, பிரித்தானியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள ட்ரம்பை அனுமதிப்பதானது தவறானதாகும் என லண்டன் யேமர் சாதிக் கான் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்