ஒருவேளை கமல் தமிழக முதல்வரானால் எப்படி இருக்கும்? ஒரு சிறிய கற்பனை!

இதோ வருவார், அதோ வந்துட்டார்… இந்த பாட்டுல வர வரிகள் பார்த்தா… அந்த படத்துல பேசுனா பன்ச் டயலாக் கேட்டா தலைவர் சீக்கிரம் வந்திருவார் போல தெரியுதே என பேசிக் கொண்டே இருக்கையில்… எல்லாம் ஆண்டவன் கையில என தலைவரே கூறியது போல ஆண்டவரே களத்தில் குதிக்க போகிறேன் என அறிவித்துள்ளார்.

இப்படி பல வசனங்கள் நாம் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக தளங்களில் படிக்க முடிகிறது. ஒருவேளை அரசியலில் குதிக்க போகும் கமல், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் போல முதல் தேர்தலிலேயே வெற்றிக் கண்டு முதல்வரானால், என்னென்ன எல்லாம் செய்வார் / செய்யலாம் என்ற ஒரு சிறிய கற்பனை கட்டுரை.

நம்மவர்!
எப்போதுமே தன்னை ஒரு சிறந்த மாணவன் என கூறிக் கொள்ளும் கமல்ஹாசன், தனது ஆசான்கள் என நிறைய பேரை கூறுவதுண்டு. அதில் நடிப்பு மற்றும் இயக்கத்திற்கு சிவாஜி, நாகேஷ் மற்றும் பாலச்சந்தர் போன்றவர்களை குறிப்பிட்டு கூறியிள்ளார்.
இப்போது அரசியல் பற்றி கற்றுக் கொண்டிருக்கும் நடிகர் கமல் பாடத்தை நன்கு படித்து, நல்ல பாடம் எடுக்கும் நம்மவர் செல்வம் பேராசிரியர் போல இருந்தால், முதல்வர் நாற்காலியில் வலுவாக அமரலாம்.

இந்தியன்!
இந்தியாவையும் ஊழலையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு தேசிய கட்சிகள் முதல், மாநில கட்சிகள் வரை பெரும்பாலான கட்சிகள் கங்கையில் நீராடுவது போல, ஊழலில் முங்கி குளித்துள்ளனர்.
இவர்களை எல்லாம் களையெடுக்க ஒரு இந்தியன் சேனாதிபதி போல செயல்பட்டால் முதல்வர் நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொள்ள தேவையில்லை, அதுவே இறுக்கமாக பிடித்துக் கொள்ளும்.

தேவர் மகன்!
லஞ்சம், ஊழலுக்கு அடுத்து இந்தியாவில் பெரியளவில் காணப்படும் நோய் ஜாதி, மத சண்டை. வெளியுலகிற்கு நாங்கள் பல சமயம் கொண்டு இணைந்து வாழும் வல்லவர்கள் என பறைசாற்றிக் கொண்டாலும், உள்ளே இன்றும் கௌரவ கொலைகளில் இருந்து அனிதாவின் மரணம் வரை சாத்திய ஏற்றத்தாழ்வினை நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

இதை ஒழிக்க ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கலாம். தன்னை நாத்திகன் என நிலைநிறுத்திக் கொள்ளும் கமல், சாதி, மதம் சார்ந்து செயற்பட மாட்டார், அவரது ஓட்டுவங்கி சாதியை சார்ந்து இருக்காது என எதிர்பார்க்கலாம்.

டூ இன் ஒன்!
வறுமையின் நிறம் சிவப்பு மற்றும் சத்யா என இரண்டு படத்திலும் பொதுவாக காணப்படும் மையப்புள்ளி வேலை இல்லா திண்டாட்டம். மற்றும் அதிகாரிகளின் ஆதிக்கம் மற்றும் பண வர்க்கத்தின் இடையூறு. வேலைக்கு ஏற்ற, தகுந்த படிப்பும், திறமையும் கற்றிருந்தாலும் இந்தியாவின் பல இடங்களில் தகுதியானவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை.
இது அரசு அலுவலகம் முதல் இந்திய கிரிக்கெட் அணிவரை அனைத்து இடங்களிலும் நாம் எதிர்கொண்டு வரும் கொடுமை. இதை சரிசெய்ய கமல் முயற்சி செய்யலாம்.

உன்னை போல் ஒருவன்!
இந்தியாவில் தீவிரவாதம் நாட்டின் எல்லைகளில் மட்டுமில்லை, உள்நாட்டிலும் இருக்கிறது. சில அமைப்புகள் சொந்த நாட்டின் மக்கள் என்றும் பாராது சுய ஆதிக்கம் காண்பித்து வன்முறையில் ஈடுபடுகின்றன.
போதா குறைக்கு சாதித்தால் மட்டுமே இந்தியன், உயிரிழந்தால் அவன் தமிழன் என்ற கண்ணோட்டம் தான் இந்தியா, தமிழகம் என்ற பிரிவினை உண்டாக கருவாக உள்ளது.
உன்னை போல் ஒருவம் கரம்சந்த் போல தீவிரவாதம் மற்றும் வன்முறையை எதிர்க்கும் நபராக கமல் குரல் கொடுக்கலாம்.

தசாவதாரம்!
உலக அரசியல் மற்றும் அறிவியல் அறிந்த ஒரு கோட்சூட் மாட்டிக் கொண்டு ஹேன்ட்சமான முதல்வராக, முதல்வன் படத்தில் அர்ஜுன் அமர்ந்திருந்தது போல கம்பீரமாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

விஸ்வரூபம், அன்பே சிவம்!
நீதிக்காக அன்பே சிவமாகவும், அநீதி நடந்தால் விஸ்வரூபமும் எடுக்கும் சகலகலா வல்லவனாகவும் தனது ரூபத்தை காண்பிக்கலாம்.
என்னப்பா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? என்ன கமலுக்கு சொம்பு தூக்குறியா? என கேள்வி கேட்கும் நபர்கள் தலைப்பை படிக்கவும். இவை யாவும் சிறிய கற்பனையே!
இது நிஜமா நடுக்கும்னு நாங்க சொல்லல, நடந்தா நல்லா இருக்கும்-னு சொல்றோம்… அம்புட்டு தான்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்