கனடாவில் கடந்த 25 வருடங்களாக இயங்கிவரும் திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் வெள்ளி விழா

கனடாவில் கடந்த 25 வருடங்களாக இயங்கிவரும் திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் வெள்ளி விழா இன்று சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள “தமிழ் இசைக்கலா மன்ற” கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிகளை ஈஸ்ட் எப்எம் வானொலி அறிவிப்பாளர் ரிசிஸ் காந்த் அழகாக தொகுத்து வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி, திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு குகதாசன், முன்னாள் தலைவர்களில் ஒருவரான திரு ஶ்ரீநி வெற்றிவேல் மற்றும் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி, திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு குகதாசன் அவர்களிடம் நலன்புரிச் சங்கத்தின் சேவைகளைப் பாராட்டும் வகையில் சான்றிதழ் ஒன்றைக் கையளித்து பின்னர் தொடர்ந்து உரையாற்றுகையில் கனடாவில் கடந்த 25 வருடங்களாக இயங்கிவரும் திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் சேவைகளைப் பாராட்டி குறிப்பாக இந்தச் சங்கத்தின் ஆதரவில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் வீட்டுத் திட்டம் சிறப்பாகவும் செம்மையாகவும் மேற்கொள்ளப்படுவதாக தாம் கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் பயணம் செய்துபோது அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பவதாரணியின் பாரதி இசைக்குழு வின் பாடல் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அதை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய திரு மதிவாசன் சீனிவாசகம் திருகோணமலை நலன்புரிச்சங்கம் மேலும் பல சேவைகளை ஆற்ற வேண்டும் என்றும் அதற்கு தமது இசைக் குழு தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற மக்கள் தங்கள் நிதி அன்பளிப்புக்களை வழங்கிச் சென்றார்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்