ஒபாமாவும், ஹரியும் அருகருகே! – பேசிக் கொண்டது என்ன?

கனடாவில் நடைபெற்ற இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், பிரித்தானிய இளவரசர் ஹரியும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகளைக் கண்டுகளிக்க அருகருகே அமர்ந்த ஹரியும், ஒபாமாவும் சுவாரசியமாக உரையாடிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் ஒபாமா மற்றும் ஹரி ஆயியோருக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

ஹரியின் காதலி மேகன் குறித்து விசாரித்த ஒபாமா, மேகன் விளையாட்டுப் போட்டிகளை ரசிக்கின்றாரா எனவும் விசாரித்ததாகவும், அதற்கு ஹரி ஆம் அவர் விளையாட்டுகளை ரசிக்கின்றார் என பதிலளித்ததாகவும் குறித்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேகன் தற்போது நடித்துவரும் தொலைக்காட்சி தொடர் குறித்து ஒபாமா ஹரியிடம் தகவல்களை கேட்டுள்ளதாகவும் கூறியுள்ள மாணவி, ஒபாமாவின் பாரியார் மிக்செல்லின் நலன் தொடர்பில் ஹரி விசாரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற போது ஒபாமாவும், ஹரியும் மகிழ்ச்சியுடன் உரையாற்றிக் கொண்டு, போட்டிகளையும் ரசித்ததாக குறித்த மாணவி மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இளவரசர் ஹரி மற்றும் அவரது காதலி மேகன் ஆகியோர் இணைந்து முதன்முறையாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாலும், ஹரி முன்னின்று போட்டிகளை ஆரம்பித்து வைத்தாலும் பல பிரபலங்களும் குறித்த நிகழ்விற்கு வருகைத் தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்