பிரெக்சிற் விவகாரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மன்செஸ்டரில்  கொன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், பிரெக்சிற் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

கொன்சர்வேட்டிவ்  கட்சியின் நான்கு நாள் மாநாடு மாநாடு  மன்செஸ்டரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியது.

இதன்போது, வீதியில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரெக்சிற் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டதுடன், மாநாட்டில் தமது கருத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் இரண்டாவது தடவையாகவும் வாக்கெடுப்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், அரசாங்கத்தின் வரவு –செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவும், ஒற்றைச் சந்தையில் தொடர்ந்து இருக்கவும், சுங்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவுமே நாம் விரும்புகின்றோம்’

‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும். ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகினால் அது பாரிய விளைவை உண்டுபண்ணும்’ என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்