கண்ணில் போட்ட டாட்டூவால் மொடலுக்கு நடந்த விபரீதம்

கனடாவில் மொடலாக திகழும் காட் காலிங்கர் எனும் 24 வயது இளம்பெண் கண்களில் டாட்டூ போட்டதால் கண் பார்வையை இழந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் உலகிற்கு கூறுவதாவது, கண்களில் டாட்டூ போட்டதால், கண் பார்வை பறிபோகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. டாட்டூ போட்டுக் கொண்ட பின் எனது கண்ணில் இருந்து ஊதா நிறத்தில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அதனால் உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்தேன்.
ஆனால் டாட்டூ மை கண்ணின் கார்னியாவை பாதித்து விட்டதால் என் கண் பெரிதாக வீங்கி, இமையைத் திறக்க முடியாமல் பார்வை குறைந்து போனது. பின் இதற்காக நான் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் என் கண்களையும், பார்வையை பழைய நிலைக்கு மீட்க முடியவில்லை. என் பார்வை முழுமையாக மீண்டும் கிடைக்காது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர்.
அதனால் எனது கண் பார்வையை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறேன். அதன் முன் எனக்கு ஏற்பட்ட இப்பாதிப்பை உலகத்திடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை போல எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் எனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன். எனவே கண்களில் டாட்டூ போடும் முன் தகுதியான,
தரமான டாட்டூ கலைஞரா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள், அதோடு முடிந்தளவு கண்களில் டாட்டூ போடுவதைத் தவிர்த்து விடுங்கள் என்று காட் காலிங்கர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்