குயின் எலிசபெத் வேயில் வாகன விபத்து: எட்டு பேர் காயம்

குயின் எலிசபெத் வேயில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுஞ்சாலை ரொறொன்ரோ பிணைப்பு பாதையில் குவெல்பிற்கு அருகில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

சிறிய ரக வான் மொத்தமாக கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு கம்பியுடன் மோதி பல தடவைகள் உருண்டு விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதில் ஏழு பேருக்கு உயிராபத்தற்ற காயங்களும் ஒருவர் உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மருத்துவ பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இவ்விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்