பிரித்தானியா மீது SAVE THE CHILDREN அமைப்பு சாடல்

பிரித்தானியா, யேமன் சிறுவர்களுக்கு அச்சத்தை ஏற்றுமதி செய்கிறது என பிரபல சர்வதேச தொண்டு நிறுவனமொன்று குற்றம் சாட்டியுள்ளது.

யேமனில் யுத்தம் புரிந்துவரும் சவுதி மற்றும் அதன் கூட்டணிக்கு ஏவுகணைகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ததன் மூலம் பிரித்தானியா 4.24 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ளதாக சேவ் த சில்ரன் (Save the Children அமைப்பு) அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், போரில் சிக்கியுள்ள யேமன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் மிகப்பெரிய நன்கொடையாளர்களாக பிரித்தானியா விளங்குவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமொன்று அறிவித்துள்ளது.

யேமனுக்கு உதவி வழங்குவதில் பிரித்தானியா உலகில் முன்னணி வகிக்கும் அதேவேளை, மோதலில் ஈடுபட்டுவரும் நாடுகளுக்கு ஆயுதங்களையும் ஆதரவையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்