11 டொலர்களால் கிடைத்த 60 மில்லியன் டொலர்கள்: கனடாவில் சம்பவம்

அல்பேர்ட்டா வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ஷ்டலாப சீட்டினை வென்றெடுத்த தம்பதியினர் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.

பிரெட் மக்கொய் மற்றும் றொபின் வாக்கர் என்ற தம்பதிகளே 60 மில்லியன் டொலர்கள் வென்ற வெற்றியாளர்களாகியுள்ளனர்.

வெறும் 11 டொலர்கள் பெறுமதியான குயிக் பிக் அதிர்ஷ்டலாப சீட்டின் மூலம் பெருந்தொகையான பணத்தினை பெற்ற இவர்களை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

பரிசுத் தொகையை வென்றெடுத்தது குறித்து அவர்கள் கூறுகையில், ‘இச்சம்பவம் ஒரு கனவு போல் உணர்கிறோம். உடனடியாக நாங்கள் எந்த விதமான பெரிய திட்டங்களையும் தீர்மானிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்