இந்திய வீரர்களின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டிக்கான இந்திய வீரர்களின் பயிற்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி நாளை முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் துவங்குகிறது.
இந்நிலையில் இன்று முதல் டி-20 போட்டிக்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு தொடர் மழை பெய்ததால், இந்திய அணியினரின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
இது இந்த பருவகாலத்தில் சகஜம் தான். ஆனால் இதனால் போட்டிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என மைதான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்