கார் நுழைந்து மோதியதில் பலர் காயம்;லண்டனில் சம்பவம்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாதசாரிகள் கூட்டத்தில் கார் புகுந்ததில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

லண்டனில் உள்ள தெற்கு கென்சிங்டன் பகுதியில் மிகவும் பழைமையான தேசிய வரலாற்று அருங்காட்சியகம் உள்ளது.

பரபரப்பு நிறைந்த இந்த பகுதியில் அருங்காட்சியகத்தின் அருகே உள்ள நடைபாதைக்குள் பாய்ந்த கார் ஒன்று மோதியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த வாடகைக் காரின் ஓட்டுநரைக் கைது செய்த ஸ்கொட்லாந்து யார்ட் பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் லண்டன் நகரில் உள்ள பாராளுமன்றக் கட்டிடம் அருகே பாதசாரிகள் மீது காரை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

அதன்பின் ஜூன் மாதம் லண்டன் பாலம் அருகே நடைபெற்ற இதேபோன்ற மற்றொரு தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.

இன்றைய தாக்குதலுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா, என்பது தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், காயமடைந்த பலர் அம்பியூலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் செல்லும் காட்சிகளையும், அங்கு ஹெலிகாப்டர் மூலம் பொலிசார் ரோந்து வரும் காட்சிகளையும் லண்டன் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்