ஜடேஜாவின் ரெஸ்டாரெண்டில் அதிரடி சோதனை

ஜடேஜாவின் ரெஸ்டாரெண்டில் அதிரடி சோதனை


இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரும் ஆல்ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா குஜராத்தில் ரெஸ்டாரெண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இதனை அவருடைய சகோதரி நைனா கண்காணித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென ராஜ்கோட் முனிசிபல் கார்பரேசன் அதிகாரிகள் ஜடேஜா ரெஸ்டாரெண்ட் உட்பட 3 இடங்களில் சோதனை நடத்தினர்.

நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்டு வந்த வேக வைத்த உணவுப் பொருட்கள், பூஞ்சைகள் படந்த பிரெட், காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சோதனையில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட காலாவதி ஆன உணவுப் பொருட்களை அதிகாரிகள் அழித்தனர்.

இதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விரேந்தர் சேவாக் ஆகியோரும் சொந்தமாக ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்