இதை கூட உன்னால செய்ய முடியாதா? இப்படி பண்ணி வச்சுருக்கியே.!! உன்ன நம்புனது என்னுடைய தப்புதான்.!!

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா, தினகரனை கடுமையாக வசை பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடல் நலம் சரியில்லாத தனது கணவரை காண கர்நாடகா சிறையில் இருந்து சசிகலா பரோலில் வெளிவந்துள்ளார்.

நேற்று காலை சென்னை குளோபல் மருத்துவமனைக்கு சென்ற சசிகலா தனது கணவரை சந்தித்தார்.

பின்பு அவர், இரவில் வீடு திரும்பினார். வீட்டில் இரவு உணவை முடித்த சசிகலா தினகரனுடன் கலந்துரையாடி இருக்கிறார்.

இது குறித்து மன்னார்குடி தரப்பில் கூறப்படுவதாவது:-

நான்தான் எடப்பாடியை முதல்வர் பதவியில் அமர்த்தினேன். எடப்பாடி ஓபிஎஸ் உடன் சேர்ந்ததால் உனக்கு என்ன பிரச்னை?. இப்போது கட்சியும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. ஆட்சியும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை.

நீ மட்டும் பிரிந்து வராமல் இருந்திருந்தால், அவர்களை நாம் எளிதாக கட்டுப்படுத்திருக்க முடியும். இப்போது, நான் யாருக்கு பதவி வாங்கி கொடுத்தேனோ, அவர்கள் மட்டும்தான் நமக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

இனிமேல் மற்றவர்களை  எப்படி நாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்? எல்லாம் எல்லை மீறி போய் விட்டது. இதெற்கெல்லாம் நீதான் பொறுப்பு என்று கடுமையாக தினகரனை சசிகலா வசைபாடியிருக்கிறார்.

சசிகலாவின் கோபத்தை சற்றும் எதிர்பார்க்காத தினகரன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக மன்னார்குடி தரப்பில் கூறுகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்