அந்த கலெக்டரை மாற்றியே ஆகவேண்டும்.!! இல்லனா எனக்குத்தான் அசிங்கமாக போய்விடும்.!!எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் முக்கிய தலைவர்.!!

அரியலூர் மாவட்ட கலெக்டரை மாற்றியாகவேண்டும் என்றும் கொறடா ராஜேந்திரன் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்ட கலெக்டராக லட்சுமி பிரியா கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார் . அதன் பிறகு, அரியலூர் மாவட்ட அங்கன்வாடியில் காலியாக உள்ள 407 பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டார்.

அதனோடு, ஆளுங்கட்சி தலையீடு இல்லமால், தகுதியின் அடிப்படையில்தான் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று கலெக்டராக லட்சுமி பிரியா அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.

அதிகாரிகளும் கலெக்டரின் உத்தரவுப்படி அங்கன்வாடி பணியிடங்களை நிரப்பியுள்ளனர்.

இதனால், அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக பலருக்கு வாக்கு கொடுத்திருந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கலெக்டரின் கெடுபிடியால் அதிருப்தியடைந்த கொறடா ராஜேந்திரன், அவரை மாற்றியே ஆகவேண்டும் என்று எடப்பாடியிடம் வற்புறுத்தியுள்ளாராம்.

இதனால், அரியலூர் கலெக்டர் விரைவில் மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்