சூடு பிடிக்கும் துபாய் டெஸ்ட் வெல்லப்போவது யார்?

 

துபாய் டெஸ்டில் இலங்கை பவுலர்கள் ‘பிடியில்’ சிக்கிய பாகிஸ்தான் அணி, திணறல் ஆட்டத்தை வெ ளிப்படுத்தி வருகிறது.

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் (பகலிரவு) துபாயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 482, பாகிஸ்தான் 262 ரன்கள் எடுத்தது.

மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து, 254 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்சில் 96 ரன்னுக்கு சுருண்டது. பின் 317 ரன் எடுத்தால் வெற்றி என, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது.

இம்முறை சமி அஸ்லாம் (1), அசார் அலி (17), ஹாரிஸ் சோகைல் (10) என, வரிசையாக அவுட்டாக, 52 ரன்னுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தள்ளாடியது.

பின் இணைந்த ஆசாத் சபிக், கேப்டன் சர்பராஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நான்காவது நாள் முடிவில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 198 ரன்கள் எடுத்து, 119 ரன்கள் பின்தங்கி இருந்தது. சர்பராஸ் (57), சபிக் (86) என, இருவரும் 6வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்