பொலிஸ் இல்லாத பொலிஸ் நிலையம் !

டுபாயில் பொலிஸாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் நிறுவப்பட்டு செயற்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, சேவை பகுதி என 3 முக்கிய பிரிவுகள் உள்ளன.

‘எஸ்.பி.எஸ்.’ எனும் பெயரில் இந்த ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் இயங்குகின்றது,

இந்த பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும் என கூறப்படுகிறது.

இங்கு வரும் மக்கள், ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்தின் முகப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் எந்திரத்தில், தாங்கள் எந்த சேவையை பெற வந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி, அதற்கான அனுமதிச்சீட்டை பெற்றுக்கொண்டு, காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு தங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.

காணொளிக்காட்சி மூலம் 24 மணி நேரமும் பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொள்ள முடியும்.

ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்துக்கு வரும் மக்களின் உதவிக்காக தற்காலிகமாக அங்கு 2 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சேவையை மக்கள் முழுமையாக பயன்படுத்த தெரிந்துகொண்ட பின் பொலிஸார் இருவரும் அங்கிருந்து வெளியேறிவிடுவர் என்று கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்