நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட அறுவர் கைது!!!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 6 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, டி.வி.சானக்க, பிரசன்ன ரணவீர மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, அஜித் பிரசன்ன ஆகியோருக்கு, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, இன்றிரவு 7.30 அளவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்