செருப்பை காணவில்லை என புகார்: வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் போலீசார்

செருப்பை காணவில்லை என புகார்: வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் போலீசார்


மராட்டியம் மாநிலத்தில் செருப்பை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரை உதாசீனப்படுத்தாமல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் நடந்துள்ளது. செருப்பை காணவில்லை என புகார்: வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் போலீசார் மும்பை: மராட்டியம் மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ராக்‌ஷிவாதி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஷால் கலேகர். கடந்த 3-ம் தேதி தனது வீட்டு வாசலில் கழற்றி போட்ட செருப்பை காணவில்லை என விஷால் அங்குள்ள போலீசில் புகாரளித்துள்ளார். செருப்புதானே என்று புகாரை அலட்சியப்படுத்தாத போலீசார், இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருட்டு வழக்கை பதிவு செய்தனர்.

மேலும், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். 425 ரூபாய் மதிப்புடைய காணமல் போன செருப்பு சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை 3 மணி முதல் 8 மணிக்குள் திருடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இது போன்ற வழக்கை தனது வாழ்நாளில் இப்போது தான் சந்தித்துள்ளதாக விசாரணை அதிகாரி நாயக் தோல் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்