தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்ட சோகம்…..!

ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் 5 ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்தன.

இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 20 ஓவர் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் உள்ள JSCA இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 27, ஹர்திக் பாண்டியா 25 ரன்களை எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெரன்டோர்ஃப் 4, ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியாவுக்கு 119 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸி. அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் ஆஸி. அணி தொடரை சமன் செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்தியா வென்று இருந்தால் தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு வந்திருக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்