உடற்பயிற்சி நிலையத்தில் இரும்புப் பளுவுக்குள் ஆணுறுப்பு சிக்கிதவிப்பு

உடற்­ப­யிற்சி நிலை­ய­மொன்றில், உடற்­ப­யிற்­சிக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பளுவில் நபர் ஒரு­வரின் ஆணு­றுப்பு இறுகிக் கொண்ட நிலையில் தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி நபர் 2.5 கிலோ­கிராம் எடை­யுள்ள இரும்புப் பளு­வுக்­குள்­ளி­லி­ருந்து தனது ஆணு­றுப்பை விடு­விக்க முடி­யாமல் போன நிலையில் அவர் மிகவும் வலியை அனு­ப­வித்தார்.

அவர் மிகவும் வெட்­கமும் பதற்­றமும் அடைந்­த போதிலும் தீய­ணைப்புப் பிரி­வி­னரை உத­விக்கு அழைப்­பதைத் தவிர அவ­ருக்கு வேறு வழி­யி­ருக்­க­வில்லை.

பின்னர் தீய­ணைப்புப் பிரி­வினர் அங்கு வந்து, குறித்த இரும்புப் பளுவை தகர்த்து, மேற்­படி நபரை விடு­வித்­தனர்.

ஜேர்­ம­னியின் வோர்ம்ஸ் நகர தீய­ணைப்புப் படை­யினர் இது குறித்து சமூக வலைத்­த­ளங்­களில் தெரி­வித்­துள்­ள­துடன், உடைக்­கப்­பட்ட பளுவின் புகைப்­ப­டத்­தையும் வெளி­யிட்­டுள்­ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்