நடிகர் சந்தானத்தை வலை வீசி தேடும் போலீஸ்

நடிகர் சந்தானத்தை வலை வீசி தேடும் போலீஸ்


பண விவகாரத்தில் கைகலப்பாகி, கட்டுமான நிறுவன உரிமையாளரைத் தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில், நடிகர் சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும், ‘சர்வர் சுந்தரம்’ படம் இந்த மாதத்தில் வெளியாக இருக்கிறது. சந்தானம் நடிப்பில் ‘சக்க போடு போடு ராஜா’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்கள் இறுதிக்கட்டத் தயாரிப்பில் இருக்கின்றன. தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம்.

 

இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், பிரேம் ஆனந்த் என்ற வழக்கறிஞரை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, நடிகர் சந்தானம் தலைமறைவாக இருந்து வருகிறாராம். விரைவில் வெளியாகவிருக்கும் அவரது படங்களுக்கு இந்தப் பிரச்னையால் சிக்கல் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்