6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள இலங்கை அணி

சுற்றுலா இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இளஞ்சிவப்பு நிறப்பந்தில் பகலிரவு ஆட்டமாக டுபாயில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 317 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தில்ருவன் பெரேரா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார். ஆட்ட நாயகனாகவும், தொடர் ஆட்ட நாயகனாகவும் திமுத் கருணாரட்ன தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணி 2-0 என்ற வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் தொடரில் வெற்றி கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கட் சுற்றுத்தொடரை வெற்றி கொண்ட பெருமை இலங்கை அணிக்குக் கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் தோல்வி கண்டதன் மூலம் ரெஸ்ட் போட்டி தரப்படுத்தல் பட்டியலில் பாகிஸ்தான் அணி 7ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கை அணி 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்