காணிகளை விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 62 சதவீதமானவை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

ஊடகாவியாலளர்: இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிலும் சமீபத்தில் பேசப்பட்டது. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இருந்துவருவதாக குறை தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இராணுவப்பேச்சாளர் ரொசான் செனவிரத்ன: இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் இரண்டு வருடங்களிற்குள் முடிவிற்கு கொண்டுவருவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்