ஐ.நா. விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை ஏற்கவேண்டியதில்லை!

 

ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை ஏற்கவேண்டிய தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை என்று இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை ஊக்குவிப்பதற்கான விசேட நிபுணர் பப்லு டி கிறிப் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஏனைய நாடுகளைப் போன்று ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்களின் அலோசனைகளையும் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிறுவன ரீதியான கட்டியெழுப்பல்கள், கொள்கை உருவாக்கங்கள், கொள்ளை மறுசீரமைப்புக்கள், பயிற்சிகள் போன்ற விடயங்களில் தேவைப்படின் அவர்களின் ஆலோசனைகளை பரிசீலனை செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்