ஹன்சிகா எடுத்த செல்பியால் முடங்கிப் போன சாலை !

சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே தனியார் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்தார் நடிகை ஹன்சிகா. அவரைக் காண ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் குவிந்து விட்டனர். இதனால் ரோடு முடங்கிப் போய், சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புதிய நகைக்கடை ஒன்றைத் திறண்டு வைக்க வந்திருந்தார் நடிகை ஹன்சிகா. நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நகைக்கடையைத் திறந்து வைத்தார்.  பின்னர், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தார் ஹன்சிகா. மெல்லிய புடவையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து வந்த ஹன்சிகாவைப் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள், பலத்த கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

அதனால் உற்சாகம் அடைந்த ஹன்சிகா ரசிகர்களைப் பார்த்து கையசைத்ததுடன், நடனம் ஆடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.தொடர்ந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து அசத்தினார் ஹன்சிகா.   இதனால் மேலும் உற்சாகம் அடைந்த ரசிகர்களின் குரலால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

நடிகை ஹன்சிகா வருகிறார் என்றதுமே, அவரைப் பார்க்க காலை முதலே ரசிகர்கள் அப் பகுதியில் கூடியிருந்தனர். இதனால் தாரமங்கலத்தில் இருந்து வனவாசி செல்லும் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்