சிறுமியை கர்ப்பமாக்கிய தாய் மாமன்.. மருத்துவ பரிசோதனையில் சிக்கிய மேலுமொரு மாமா.!

சண்டிகரில் தாய்மாமன் இருவரும் கூட்டாக சேர்ந்து 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதையடுத்து அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது பரிசோதனை செய்ததில் சிறுமி வயிற்றில் கரு உண்டாகி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பெற்றோர்கள் சிறுமியின் கருவை கலைக்க வேண்டுமென நீதிமன்றத்ததை நாடியிருந்தனர்.
ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் தற்போது கருவை கலைத்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிறுமியை தொடர்ந்து மருத்துவமனையில் வைத்திருந்தனர் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை குழந்தை நல அமைப்பு ஒன்றிடம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து பெற்றோர்கள் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தாய்மாமன் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அவரின் மரபணு சோதனையை பரிசோதனை செய்ததில் ஒத்துபோகவில்லை.
அடுத்ததாக சிறுமியின் இரண்டாவது மாமா மீது சந்தேகமடைந்து அவரிடம் மரபணு சோதனை நடைபெற்றது. அவரது ஒத்துப்போனது. இதனால் இருவரும் மாறி மாறி சிறுமியை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்