ரஷ்ய வாலிபர் தமிழ் நாட்டில் பிச்சை எடுக்க காரணம் என்ன ?

.டி.எம் கார்டு லாக்கானதால் காஞ்சிபுரம், குமரக்கோட்டம் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரஷ்ய வாலிபருக்கு போலீஸார் உதவி செய்துள்ளனர். ரஷ்ய நாட்டை சோ்ந்தவா் இவாஞ்சலின்.
இவா் இன்று காலை சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளார். அங்கு சில கோவில்களைப் பார்த்து விட்டு மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரக்கோட்டம் கோவிலுக்கு அருகில் உள்ள ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
ஏ.டி.எம்.ல் பணம் வராததை அறியாமல் அவர் தொடர்ந்து முயற்சி செய்ததால் அவரது ஏ.டி.எம் கார்டு முடக்கப்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது தவித்த இவாஞ்சலின் வேறு வழியின்றி குமரகோட்டம் கோவில் வாசலில் அமா்ந்து பிச்சை எடுத்துள்ளார்.
இந்த தகவல் அறிந்து உடனடியாக கோயிலுக்கு வந்த காவல்த்துறையினர், அவருக்கு 500 ரூபாய் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னையில் அவர் தூதரகத்தின் உதவியை நாடி சொந்த நாட்டிற்கு செல்ல உள்ளதாக தெரிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்