சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் வசதி

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் வசதி


சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் அலுவலகங்கள் செல்ல வசதியாக இலவச சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் வசதி சென்னை: சென்னை விமான நிலையம் முதல் நேரு பூங்கா வரை ஒரு மார்க்கமாகவும் மற்றும் விமான நிலையம் முதல் சின்னமலை வரை இரண்டாவது மார்க்கமாகவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், பல இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக இலவச சைக்கிள் சேவையை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, பயணிகள் அலுவலகம் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு சைக்கிள்களை தங்களது அடையாள அட்டைகளை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு 100 மணி நேரம் இலவசமாக சைக்கிள்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்