சந்திமால் மிக சிறப்பு; சங்கவின் புகழ்ச்சி

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் தலைமை சிறப்பாகவும், பிரமிப்பாகவும் இருந்தது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

Sri Lankan cricketer Kumar Sangakkara (R) shares a light moment with teammate Dinesh Chandimal (L) during a practice session at the R.Premadasa Cricket Stadium in Colombo on July 27, 2012. Sri Lanka thrashed India by nine wickets in the second one-day international in Hambantota on July 24 to level the five-match series 1-1. AFP PHOTO/ LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/GettyImages)

முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக 155 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி தலைவர் சந்திமால், இரண்டாவது டெஸ்டில் அரை சதம் அடித்தார்.

இதோடு மிக திறமையாக அணியை வழிநடத்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் பிரபல வீரர் சங்ககாரா;

“இலங்கை அணிக்கு இது தகுதியான வெற்றியாகும்.சந்திமாலின் சிறப்பான தலைமையின் கீழ் இலங்கை கடுமையாக உழைத்தது. ரங்கன ஹேரத் மற்றும் திலுருவன் ஆகியோரது ஆட்டமும் சிறப்பாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் சந்திமால் அழுத்தத்தை எதிர்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. சந்திமாலின் தலைமை பிரமிப்பாக இருந்த அதே சமயத்தில், பொறுப்பை உணர்ந்து துடுப்பாட்டத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டது பாராட்டுகுரியது. சந்திமால் டெஸ்ட் கிரிக்கெட் போன்றே ஒருநாள், T-20 போட்டிகளிலும் அணிக்காக விளையாட வேண்டும். அவரின் முழு திறமையை இனி தான் நாம் பார்க்க போகிறோம். டெஸ்ட் போட்டியில் 10,000 ஓட்டங்களை சந்திமால் குவிப்பார் என நம்புகிறேன்..” என தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்