தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்கிறது சம்பந்தன் குழு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அனுமதி கேட்டுள்ளனர்.
எனினும், ஜனாதிபதி செயலகத்திலிருந்து சந்திப்புக்குரிய அழைப்பு இதுவரை வரவில்லை.
உண்ணாவிரதக் கைதிகளுக்கு அரசு உடனடியாக உரிய பதிலை வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்