ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென்

ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென்


நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவைர் அர்ஜென் ராபென், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்பொவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம்பெறவுள்ள பிஃபா உலக கிண்ண போட்டிகளுக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற தவறிய நிலையிலேயே அவர் தனது ஓய்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலக கிண்ண தகுதிகான் போட்டிகளில் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2 க்கு 0 என்ற குால் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அர்ஜென் இரண்டு கோல்களை அணிக்காக போட்டுக் கொடுத்தார்.

எனினும், எனினும் ஏ பிரிவுக்கான புள்ளிப்பட்டியிலில் 3 ஆம் இடத்தையே நெதர்லாந்து அணி பிடித்திருந்தமையினால், உலக கிண்ண போட்டிகளுக்கான வாய்ப்பை தவறவிட்டது.

இதனையடுத்து, அவர் தனது ஓய்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நெதர்லாந்து அணிக்காக 14 ஆண்டு காலம் விளையாடியமை சிறப்பானதெனவும், 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியது என்றும் நினைவிலிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்