ஈராக்கின் உணவு விடுதி மீது தற்கொலைக் குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

ஈராக்கின் உணவு விடுதி மீது தற்கொலைக் குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

ஈராக்கின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள உணவுவிடுதியொன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கில் ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன.

ஈராக்கின் உணவு விடுதி மீது தற்கொலைக் குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

இந்த நிலையில் ஈராக்கின் மேற்கு பகுதியில் உள்ள ஹிட் எனும் நகரத்தில் உள்ள பிரபலமான உணவு விடுதி மீது நேற்றைய தினம் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 15 பேர் படுகாயமடைந்து ள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஈராக்கின் உணவு விடுதி மீது தற்கொலைக் குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்