புகையிரத சாரதிகளுக்கு ஆப்பு; ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகளை மீண்டும் சேவைக்கு அழைப்பு..

புகையிரத சாரதிகள் முன்னெடுக்கும் வேலை நிறுத்தினால் ரயில் சேவைகள் இரத்தாகியுள்ள நிலையில், ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத பாதுகாவலர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு உடனடியாக அழைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புகையிரத சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்து கொள்ளும் நடவடிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நேற்று(11) இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையினால் புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்