நடிகை காஜல் அகர்வால் உயர்நீதிமன்றதிற்கு செல்ல காரணம்?

நடிகை காஜல் அகர்வால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல எண்ணை நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடித்திருந்தார். இந்த எண்ணை நிறுவனம் ஒப்பந்த காலத்தை தாண்டியும் விளம்பரத்தை டி.வி.யில் ஒளிபரப்பியதாகவும், அதனால் அந்த நிறுனம் தனக்கு இரண்டறை கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று காஜல் அகர்வால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி. “எண்ணை நிறுவனத்திடம் அந்த விளம்பரத்தின் காப்புரிமை உள்ளது. காப்புரிமை சட்டத்தின்படி அந்த நிறுவனம் அந்த விளம்பரத்தை 60 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

நடிகை காஜல் அகர்வால் உயர்நீதிமன்றதிற்கு செல்ல இதுவா காரணம்?

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து காஜல் அகர்வால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நேற்ற விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் “எண்ணை நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டீசுக்கு அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. எனவே இந்த வழக்கு முடியும் வரை தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்