மீண்டும் டாக்டர் வேடத்தில் த்ரிஷா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துவருவதோடு நீண்ட காலமாக முன்னணியில் இருந்துவருபவர் த்ரிஷா. தற்போது பரமபதம் என்ற பெயரில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அரவிந்த சாமியுடன் சதுரங்க வேட்டை 2 , முன்னணி ரோலில் நடித்திருக்கும் கர்ஜனை, மலையாளத்தில் முதன் முறையாக நிவின் பாலியுடன் இணைந்திருக்கும் ஹே ஜுட் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார் த்ரிஷா. இதனைத் தொடர்ந்து 96 படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாகவும், சாமி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் சாமி ஸ்கொயர் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாகவும் நடித்துவரும் த்ரிஷா, அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கி தயாரிக்கவுள்ள ‘பரமபதம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் நடிப்பது குறித்த தகவலை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 11) வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். ‘சர்வம்’ படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்த த்ரிஷா ‘பரமபதம்’ படத்தில் மீண்டும் டாக்டர் வேடமேற்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது. படப்பிடிப்பு இம்மாதம் 20ஆம் தேதிக்கு மேல் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்