கோஹ்லி உலக சாதனை!

ஆஸி. அணிக்கு எதிராக நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி டக் அவுட்டானார். சர்வதேச டி20ல் அவர் ரன் எடுக்கத் தவறியது இதுவே முதல் முறை. தனது 47வது இன்னிங்சில் தான் கோஹ்லி டக் அவுட் ஆனார். அந்த வகையில் இதுவும் கூட உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் சோயிப் மாலிக் 40வது இன்னிங்சிலும், இந்தியாவின் யுவராஜ் சிங் 39வது இன்னிங்சிலும் முதல் பூஜ்ஜியத்தை சந்தித்தனர். 85 சர்வதேச டி20ல் இந்திய அணி கேப்டன் டக் அவுட்டானதும் இதுவே முதல் முறை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்