வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கினைப்புக்குழுக் கூட்டம்

ஒருங்கினைப்புக்குழுக் கூட்டம் இன்று (12.10.2017) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா உதயராசா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை செயலாளர் திரு. ஆர் தயாபரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் , உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சனா, சமுதாய அடிப்படை வங்கி பிரதேச பணிப்பாளர், கிராம சேவையாளர்கள், உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , வடமாகாண சபை உறுப்பினர்களின் ஒதுக்கப்பட்ட நிதியில் நடைபெற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்