எல்பிட்டிய கல்வி வலயத்தில் சித்திரப் பாட ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு.

கலைஞர்.ஏ.ஓ.அனல்
எல்பிட்டிய கல்வி வலயத்தில் அழகியல் பாடத்துறையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு எல்பிட்டிய கல்வி வலயத்தின் அழகியல் துறை பிரதிக்கல்விப் பணிப்பாளர் பாலித ஜெயசேகர அவர்களின் தலைமையில்  ஆசிரியர் மத்திய நிலையத்தில் 2017.10.11 ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் செயலமர்வின் முக்கியத்துவம் தொடர்பில் பேசுகையில் “அழகியல் துறை என்பது வெறுமனே பார்ப்பதற்கும் ரசிப்பதற்குமானதல்ல, வாழ்க்கையின் பயன்பாட்டுக்கு பிரயோசமானது. அந்தவகையில் மாணவர்களது கற்றல் கற்பித்தல் விடயத்தில் சித்திரப்பாடத்தின் முக்கியத்துவம் அதன் பிரயோகப்பயன்பாடு மற்றும் பெறுமதி பற்றி அறிந்திருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுடைய அடைவுமட்டத்தை உயர்த்துவதற்கும், அவர்களுடைய வாழ்வை மேம்படுத்துவதற்கும் ஆசிரியர்கள் தொடர்ந்தும் பாடுபடவேண்டும். உங்களது அயராத முயற்சியினால் எல்பிட்டிய கல்வி வலயம் இன்று தென் மாகாணத்தில் முதல் இடத்தில் உள்ளது மகிழ்ச்சிக்குரியது. பாராட்டுக்குரியது. அந்தவகையில் உங்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன் ” எனக்குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசும்போது ஆசிரியர்கள் இவ்விடயம் தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் பற்றியும் கேட்டறிந்தார்.  இந்நிகழ்வின்போது  சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்  புஞ்சிகாவ அவர்கள் ஆசிரியர்களுக்கான ஆலோசனைகளையும், மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களையும் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்