விபத்தில் முஸ்லீம் காங்ரசின் உயர்பீட உறுப்பினர் பலி…

ஆர்சுபத்ரன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலி மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.நிஸாம் ஆகியோரின் இளைய சகோதரரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.டி ஜப்பார் அலி, விபத்தில் படுகாயமடைந்திருந்த நிலையில், அநுராதபுரம் வைத்தியசாலையில் இன்று (12) உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை, கிண்ணியாவிலிருந்து மூதூர் நோக்கிப் பயணித்த பஸ்ஸும் நிந்தவூரிலிருந்து வந்து கொண்டிருந்த காரும், கிண்ணியா உப்பாறு மேம்பாலத்தில் வைத்து நேருக்கு நேர் மோதி நேற்று (11) விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்திருந்தனர்.

ஜப்பார் அலி, படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுர வைத்தியசாலையில் மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் இன்று திருகோணமலை பிரேத அறையில் இரந்த போது வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் சுகாதார பிரதி அமைச்சர் பைசர் காசிம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் முன்னால் கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சர் நசீர் ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்