முருக்கன்தீவு கிராமத்தில் காட்டு யானை உட்சென்று சேதம் விளைவிப்பு:மக்கள் விசனம்

(டினேஸ்)

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட முருக்கன்தீவு கிராமத்தில் நீண்ட நாட்களாக காட்டு யானையின் இன்னலுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வரும் முருக்கன்தீவு மக்களிடையே நேற்று 11 திகதி நள்ளிரவு 12 மணியளவில் மக்களின் குடியிருப்பிற்குள் உட்புகுந்து அங்குள்ள தென்னை மரங்கள்,வீட்டுவேலிகள்,பயிர்கள் அனைத்தையும் சேதப்படுத்தி உள்ளது இது தொடர்பாக குறித்த பிரதேசத்தில் கடாந்த சில காலமாக மாலை 5 மணியளவில் பொதுமக்கள் நடமாடும் பிரதேசங்களுக்குள் உட்சென்று சேதம் விளைவிப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இது தொடர்பாக வனஜீவராசி அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் அதிகாரிகள் குறித்த நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்