30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறது ‘மை டியர் லிசா’

30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறது ‘மை டியர் லிசா’


முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மை டியர் லிசா’, தற்போது மீண்டும் விஜய் வசந்த் மூலம் திரும்பி வருகிறாள். நிழல்கள் ரவி, மனோரமா, சாதனா, ஷாரி ஆகியோர் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான படம் ‘மை டியர் லிசா’. ஹாரர் படமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகியும், இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது.

தற்போது அதே பெயரில் விஜய் வசந்த் நடிப்பில் ஒரு திகில் படம் உருவாகி வருகிறது. ‘சென்னை 28’ படம் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் வசந்த், ‘தோழா’, ‘சரோஜா’, ‘நாடோடிகள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் இவர் கதாநாயகனாக நடித்த ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவரது நடிப்பில் ‘மை டியர் லிசா’ உருவாகி வருகிறது.

ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்கி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் வசந்த்க்கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். மேலும், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். டி.எம்.உதயகுமார் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜெய்சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ரமேஷ் ரெட்டி தயாரிக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்